Sbs Tamil - Sbs

Informações:

Sinopse

Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !

Episódios

  • விக்டோரிய மாநில ஓட்டுநர்களுக்கு புதிய டிஜிட்டல் லைசன்ஸ்!

    14/05/2024 Duração: 02min

    விக்டோரியா மாநில வாகன ஓட்டிகள் தங்களது ஓட்டுநர் உரிமம்-லைசன்ஸை, டிஜிட்டல் வடிவில் தங்கள் கைபேசியில் எடுத்துச் செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • இன்றைய நிதிநிலை அறிக்கை நாட்டின் எதிர்காலத்திற்கான நம்பிக்கை - பிரதமர்

    13/05/2024 Duração: 04min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 14/05/2024) செய்திகள். வாசித்தவர் செல்வி.

  • ஒரே வாரத்தில் 3 புகலிடக்கோரிக்கையாளர் படகுகள்- விமர்சனங்களை எதிர்கொள்ளும் ஆஸ்திரேலிய அரசு

    13/05/2024 Duração: 02min

    ஆஸ்திரேலியாவில் புகலிடம் கோரும் நோக்கில் வந்த 3 படகுகள் எல்லைப் பாதுகாப்புப் படையினரால் கடந்த வாரம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • Understanding Menopause - Menopause – மாதவிடாய் நிற்பது குறித்து புரிந்துகொள்வோம்!

    13/05/2024 Duração: 14min

    Menopause is a significant transition for women, and understanding how to manage it is crucial for women's health. Dr. Shanthini Thavaseelan, a general practitioner and specialist in women's health, explains the signs and symptoms of menopause, available treatment options, and other related health concerns. Produced by RaySel. - பெண்களுக்கு மாதவிடாய் நின்றுபோவது ஒரு குறிப்பிடத்தக்க நலம் சார்ந்த பிரச்சனை. மேலும் அதை எவ்வாறு கையாள்வது என்பதைப் புரிந்துகொள்வது பெண்களின் ஆரோக்கியத்திற்கு முக்கியமானது என்கிறார் டாக்டர் சாந்தினி தவசீலன் அவர்கள். அவர் பெண்களின் ஆரோக்கியம் தொடர்பான நிபுணரும் GP - பொது மருத்துவருமாவார். மாதவிடாய் நின்றுபோவது குறித்த அறிகுறிகள் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து விளக்குகிறார். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.

  • இந்தியா & தமிழகம்: முக்கிய செய்திகளின் பின்னணி

    13/05/2024 Duração: 08min

    இந்தியாவின் சத்தீஸ்கரின் மாநிலத்தில் நடைபெற்ற என்கவுண்டரில் நக்சலைட்டுகள் 12 பேர் பாதுகாப்பு படையினரால் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம், நீட் தேர்வில் குஜராத் மாநிலத்தில் மிகப்பெரிய முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு, காவல்துறை அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சிறையில் உள்ள சவுக்கு சங்கர் மீது குண்டாஸ் வழக்கு பதிவு , இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட வாக்கு சதவிகித விவரத்தில் குளறுபடி என்ற திமுகவின் குற்றச்சாட்டு போன்ற செய்திகளின் பின்னணியுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!

  • ஆண்டு இறுதிக்குள் பணவீக்கம் 2.75 சதவீதமாக குறையும் என கணிப்பு!

    13/05/2024 Duração: 04min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 13/05/2024) செய்திகள். வாசித்தவர்:றேனுகா துரைசிங்கம்.

  • Key changes in Temporary Graduate visa from 1st July - மாணவர் மற்றும் Temporary Graduate விசாவில் வரவுள்ள மாற்றங்கள் யாவை?

    13/05/2024 Duração: 10min

    Beginning July 1st, significant alterations are slated for the 485 Temporary Graduate visa, a pivotal pathway for university graduates in Australia. Mr Govindaraj Raju who is the founder of Arctic Tern Migration Solutions in Adelaide talks in detail - ஆஸ்திரேலியாவிற்கு கல்வி கற்க வரும் வெளிநாட்டு மாணவர்கள் என்னென்ன பிரிவுகளில் மாணவர் விசா பெற்று கல்வி கற்க வரமுடியும். மாணவர் விசா மற்றும் Temporary Graduate visa-வில் கொண்டுவரப்பட்டுள்ள மற்றும் கொண்டுவரப்படவுள்ள மாற்றங்கள் குறித்து விரிவாக உரையாடுகிறார் Adelaide நகரில் Arctic Tern Migration Solutions நிறுவனத்தின் நிறுவனரும் குடிவரவு முகவருமான கோவிந்தராஜ் ராஜு அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி.

  • இந்த வார முக்கிய செய்திகள்

    11/05/2024 Duração: 04min

    இந்த வார முக்கிய செய்திகள்: 11 மே 2024 சனிக்கிழமை. வாசித்தவர்: றைசெல்

  • சிட்னி விமான நிலையத்தில் பயணிகள் கைவிட்டுச் சென்ற பொருட்களின் ஏல விற்பனை

    10/05/2024 Duração: 01min

    சிட்னி விமான நிலையத்தில் பயணிகள் கைவிட்டுச் சென்ற ஆயிரக்கணக்கான பொருட்களின் online ஏல விற்பனை தற்போது நடைபெற்று வருகிறது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • புறா முட்டைகளுடன் மெல்பன் விமான நிலையத்தில் வந்திறங்கியவருக்கு $6000 அபராதம்

    10/05/2024 Duração: 02min

    மெல்பன் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த ஆஸ்திரேலிய நபர் ஒருவர் புறா முட்டை மற்றும் புகையிலையை கொண்டுவந்ததற்காக அவருக்கு சுமார் 6,000 டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • Mushroom foraging in Australia: Is it safe? - காட்டுக் காளான்களை உண்பது பாதுகாப்பானதா?

    10/05/2024 Duração: 08min

    In Australia, authorities strongly advise against eating mushrooms that have not been expertly identified or purchased from a supermarket or grocer, as some fungi can be toxic or deadly if consumed. In each State and Territory, rules and regulations vary, and mushroom foraging is not allowed in some areas. - காளான்களைத் தேடிப் பிடுங்கி உண்ணும் பொழுதுபோக்கு மற்றும் பழக்கம் உலகின் பல பகுதிகளில் பிரபலமாக உள்ள பின்னணியில், காட்டுக் காளான்களை உண்பதில் உள்ள அபாயங்கள் பற்றி அறிந்திருப்பது அவசியமாகும். இதுதொடர்பில் Chiara Pazzano ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • Experiences of two asylum seekers form the basis for her new book! - இரண்டு புகலிடக் கோரிக்கையாளர்கள் அனுபவங்கள் நூல் வடிவமாக !

    10/05/2024 Duração: 18min

    Award-winning author Shankari Chandran, recipient of last year's Miles Franklin Award, has recently unveiled two new releases: an audiobook titled 'The Unfinished Business,' and 'Safe Haven' in print. Chandran engages in a candid conversation with Kulasegaram Sanchayan, delving into her novels, the inspiration behind her writing, and her aspirations for the future. - ஆஸ்திரேலிய எழுத்தாளர்களில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்திருக்கும் எழுத்தாளர் சங்கரி சந்திரன், அண்மையில் இரண்டு நூல்களை வெளியிட்டுள்ளார். “The Unfinished Business,” ஒலி வடிவிலும், “Safe Haven” என்ற நூல், மற்றொன்று அச்சு வடிவிலும் வெளியாகியுள்ளன.

  • இலங்கையின் இந்த வார முக்கிய செய்திகள்

    10/05/2024 Duração: 08min

    அபிவிருத்தி என்ற பெயரில் முல்லைத்தீவு மாவட்டத்தில் பொதுமக்களின் காணிகள் அபகரிக்கப்படுவதாக தெரிவித்து மக்கள் போராட்டம்; நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்தார் டயானா கமகே உள்ளிட்ட செய்திகளோடு “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக விவரணமொன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன்.

  • நாடுகடத்தலுக்கு எதிரான புகலிடக்கோரிக்கையாளர் வழக்கு ஒன்றை தள்ளுபடி செய்த நீதிமன்றம்

    10/05/2024 Duração: 04min

    SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வெள்ளிக்கிழமை 10/05/2024) செய்திகள். வாசித்தவர் செல்வி.

  • Australian students in teaching, nursing, and social work to receive weekly payment during work placements - Nursing, Teaching மற்றும் Social work மாணவர்களுக்கு வாரம் $320 கொடுப்பனவு - அரசு அறிவிப்பு

    09/05/2024 Duração: 13min

    The government will establish a new Commonwealth payment for an estimated 68,000 students studying nursing, teaching and social work. Praba Maheswaran spoke to High school teacher Siva Pathmanathan, Social Worker Kalpana Sriram(OAM) and presenting a news explainer. - பல்கலைக்கழங்ககளில் Nursing, Teaching மற்றும் Social work கற்கைகளில் படிக்கும் சுமார் 68,000 மாணவர்களுக்கு வாராந்தம் $320 புதிய கொடுப்பனவுகளை அரசு வழங்கவுள்ளது. இதுபற்றிய கூடுதல் விவரங்கள் அடுத்தவார நிதிநிலை அறிக்கையில் வெளியிடப்படவுள்ளன. உயர்தரப் பாடசாலையில் ஆசிரியராகப் பணியாற்றிவரும் சிவா பத்மநாதன் மற்றும் கலாசார மனநிலை மையத்தில் ஆலோசகராகப் பணியாற்றிவரும் கல்பனா ஸ்ரீராம்(OAM) ஆகியோருடன் உரையாடி செய்தியின் பின்னணியினை முன்வைக்கிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

  • மெல்பன் வீடொன்றில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் இந்திய மாணவர் மரணம்!

    09/05/2024 Duração: 02min

    மெல்பன் வீடொன்றில் அண்மையில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் கொல்லப்பட்டவர் இந்தியாவிலிருந்து கல்விகற்க வந்த Navjeet Singh Sandhu என்ற 22 வயது மாணவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.

  • தமிழின் பன்முக ஆளுமை - விபுலானநந்தர் அடிகளார்

    09/05/2024 Duração: 07min

    தமிழுக்கு அருந்தொண்டாற்றிய தமிழறிஞர் விபுலானந்த அடிகளார் பற்றி நம்முடன் பகிர்ந்துகொள்பவர் யசோதா பத்மநாதன் அவர்கள்.

  • The problem of superannuation for those from non-English speaking backgrounds - உங்களுக்கு Superannuation நிதி குறைவா? காரணம் இதுதான்!

    09/05/2024 Duração: 07min

    Australians from non-English speaking backgrounds are retiring with less superannuation on average than other Australians. Analysis by Australia's peak superannuation body has found the cohort is around 140 thousand dollars worse off come retirement. The story by Tom Stayner and Alex Anyfantis for SBS News was produced by RaySel for SBS Tamil. - ஆங்கிலத்தை தாய் மொழியாக கொண்டவர்களிடம் அதிக superannuation ஓய்வூதிய நிதி இருப்பதாக புள்ளிவிவரம் காட்டுகிறது. ஆனால் குடியேற்றவாசிகளிடம் superannuation குறைவாகவே உள்ளது. அதற்கான காரணங்களையும், அதை நிவர்த்தி செய்யும் வழிகளையும் விளக்கும் விவரணம் இது. ஆங்கில மூலம் SBS-News க்காக Tom Stayner & Alex Anyfantis. தமிழில்: றைசெல்.

  • Why Banks Hesitate to Lend to New Home Buyers and Refinancers - புதிதாக வீடு வாங்குவோருக்கும், Refinance செய்வோருக்கும் கடன் வழங்க ஏன் வங்கிகள் தயங்குகின்றன?

    09/05/2024 Duração: 11min

    Australia's big four banks are hesitant to lend to first-time home buyers and customers refinancing their loans. Nara Singham Nimalan, a credit advisor licensed under the Australian Credit Licence and director of Winning Loans, explains the reasons behind the banks' reluctance and their requests to the government. - ஆஸ்திரேலியாவில் இயங்கும் ANZ, CBA, NAB, Westpack எனும் நான்கு பெரும் வங்கிகளும் முதன்முதலாக வீடு வாங்க நினைக்கின்றவர்களுக்கு வீட்டுக் கடன் கொடுக்க தயங்குகின்றன. இதற்கான காரணங்களை விளக்குகிறார் வீட்டுக்கடன் வசதிகள் மற்றும் நிதி தொடர்பிலான ஆலோசனைகளை வழங்கும் Winning Loans நிறுவன இயக்குனர் நரா நிமலன் அவர்கள். அவருடன் உரையாடுகிறார் றைசெல்.

  • What Are the Effects of Social Media on Women? - சமூக வலைத்தளங்களும் பெண்களும்

    09/05/2024 Duração: 14min

    Social media have become prominent parts of life for many people today. Most people engage with social media without stopping to think what the effects are on our lives, whether positive or negative. This feature talks about the impact of social media in women. - பொழுது போக்காக பாவிக்க ஆரம்பித்த சமூக வலைத்தளங்கள் சில தற்போது நம்மை ஆக்ரமித்து வளர்ந்து நிற்கின்றன. வளர்ந்து வரும் சமூக வலைத்தளங்களின் பயன்பாடு பெண்கள் மீது செலுத்தும் ஆதிக்கம் மற்றும் அதில் உள்ள சாதகங்கள், பாதகங்களை விவரிக்கும் விவரணம். நிகழ்ச்சித் தயாரிப்பு செல்வி.

página 1 de 25